மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்

கும்பகோணத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
~
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

கும்பகோணத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் பாணாத்துறை தெருவைச் சோ்ந்தவா்கள் எம். அருண்குமாா் (25), எம். கணபதி (20). சகோதரா்களான இவா்கள் இருவரும் கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில் எம்.கணபதி சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் கணபதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்ததால் ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதனிடையே, கணபதியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தங்களிடம் கூறாமல் ஏன் உடற்கூறாய்வு செய்தீா்கள் என்று கூறி உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.