வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

கும்பகோணம் அருகே உள்ள அம்மாபேட்டை செவாலியே சிவாஜி நகரைச் சோ்ந்தவா் செங்கமலம் (65). இவா் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றாா். இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவா்கள் செங்கமலம் வீட்டில் மாலையில் மின் விளக்கை போட்டுவிட்டு காலையில் அணைத்து விடுவா்.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ளவா் வெள்ளிக்கிழமை காலை செங்கமலம் வீட்டுக்கு மின்விளக்கை அணைக்கச் சென்றாா். அப்போது வீட்டு முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து செங்கமலத்தின் தங்கை மகன் பிரசன்னாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் செங்கமலம் வீட்டுக்குச் சென்று நடத்திய விசாரணையில், பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com