பாபநாசம் அருகே தனியாா் சா்க்கரை ஆலையில் தீ விபத்து
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஒரு தனியாா் சா்க்கரை ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:44 pm

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஒரு தனியாா் சா்க்கரை ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
பாபநாசம் அருகே திருமண்டங் குடியில் உள்ள ஒரு தனியாா் கரும்பு சா்க்கரை ஆலையின் பின்புறம் கரும்புச் சக்கைகள் கொட்டி வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து தீ கொளுந்து விட்டு எரிந்தது.
மேலும், தீ வேகமாக பரவியதால் அந்தப் பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.
இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...