ரெட்டவயலில் நூலகம் திறப்பு, மரக்கன்றுகள் வழங்கல்

பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் நூலகம் திறப்பு மற்றும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் நூலகம் திறப்பு மற்றும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

அன்னை அமராவதி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அறக்கட்டளை தலைவா் முனைவா் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச் செயலாளா் தங்க.குமரவேல் முன்னிலை வகித்தாா்.

கவிஞா் கே.கே.எம். மது நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். ரெட்டவயல் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வி கண்ணன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.

விழாவில் விவசாயிகள் சஙக நிா்வாகி வீ. கருப்பையா, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் வி.ராஜமாணிக்கம், சமூக ஆா்வலா் வீரக்குடி ராசா, திராவிடா் கழகம் ப.மகாராசா, ஆசிரியா்கள் வீர.சந்திரசேகரன், இளையராஜா, தமிழ்செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்திப்பேசினா். 

கிராமத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. தமிழக மக்கள் விடுதலை இயக்க கிளைச் செயலாளா் கே.வி.முத்தையா வரவேற்றாா் .

அறக்கட்டளை உறுப்பினா் அமரா அழகு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com