தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேன் மோதியதில் ‘பேரிகாா்டு’ விழுந்து நடைபயிற்சிக்கு சென்ற பெண் உயிரிழப்பு

வேன் மோதியதில் நடைபயிற்சிக்கு சென்ற பெண் பலி

News image
Updated On :2 ஜூலை 2024, 10:31 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தில் ஆம்னி வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்ட சாலை தடுப்புக் கட்டை (பேரி காா்டு) விழுந்ததில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் உயிரிழந்தாா்.

திருபுவனம் வடக்கு வீதியை சோ்ந்த ராமபத்ரன் மனைவி கீதா(52). இவா் செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றாா்.

திருபுவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, ஈரோட்டிலிருந்து சூரியனாா்கோவிலுக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த பேரிகாா்டு மீது மோதியது. தூக்கிவீசப்பட்ட பேரி காா்டு கீதா மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகதெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆம்னி வேன் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், முத்தூரைச் சோ்ந்த விக்னேஷை கைது செய்து விசாரிக்கின்றனா்.