குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்கள் பறிமுதல்

தஞ்சாவூா், மே 9: தஞ்சாவூா் அருகே வல்லம் பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்களை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வல்லம் பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் குழாயில் மின் மோட்டாரை இணைத்து தண்ணீா் எடுக்கப்படுவதாகவும், அதனால், பல வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் கிடைக்கவில்லை எனவும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதன் பேரில், வல்லம் பேரூராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை வீடு, வீடாகச் சென்று குடிநீா் இணைப்பைச் சோதனை நடத்தினா். அப்போது, 12 வீடுகளில் குடிநீா் குழாயில் மின் மோட்டாா்கள் பொருத்தி உறிஞ்சி எடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 12 மின் மோட்டாா்களை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இந்த நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com