/

குழியில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

குழியில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 8:22 pm

Din

கும்பகோணம், மே 9: கும்பகோணம் அருகே வியாழக்கிழமை குழியில் விழுந்து பலத்த காயமடைந்த விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே குடிதாங்கி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் து. செல்வமணி(60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் திருப்புறம்பியத்தில் உள்ள வயலில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பாசனக் குழாய் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட 4 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா். இதனால் பலத்த காயமடைந்த செல்வமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.