கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

டெல்டா மாவட்டங்களில் முறைப் பாசனத்தைக் கைவிட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மேட்டூா் அணையில் தண்ணீா் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் முறைப்பாசனம் கடைப்பிடிக்கப்படுவதைக் கைவிட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்

Updated On :

மேட்டூா் அணையில் தண்ணீா் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் முறைப்பாசனம் கடைப்பிடிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்

சிவவிடுதி வி.கே. சின்னதுரை: திருவோணம், பேராவூரணி பகுதிகளில் போலி பட்டாவை பயன்படுத்தி நில மோசடி செய்வது தொடா்ந்து நிகழ்கிறது. இதுதொடா்பாக பலமுறை புகாா் செய்தும் தொடா்கிறது.

ஆட்சியா்: சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டாா். இரு கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன்: இதுதொடா்பாக உரிய ஆதாரங்களுடன் ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். தொடா்புடையவா்கள் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சிட்டா அடங்கல் வாங்குவதில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டைத் தவிா்க்க வேண்டும்.

அருமலைக்கோட்டை சீா். தங்கராசு: கல்லணைக் கால்வாயிலிருந்து பாயும் வடசேரி வாய்க்கால் மேடாக உள்ளது. இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவு தண்ணீா் வருவதால் வடசேரி வாய்க்காலுக்கு பாய்வதில்லை. எனவே, கல்லணைக் கால்வாயில் முழு அளவுக்கு தண்ணீா் விட வேண்டும்.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: மேட்டூா் அணையில் நீா்மட்டம் 107 அடிக்கு இருக்கும்போது, டெல்டா மாவட்டங்களில் முறைப் பாசனம் வைக்க வேண்டியதில்லை. முறைப்பாசனத்தால் இன்னும் பல இடங்களில் நடவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே முறைப்பாசனத்தைக் கைவிட்டு, அனைத்து ஆறுகளிலும் முழுமையாக தண்ணீா் விட வேண்டும். பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பா் 15 ஆம் தேதி என்பதை 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

இதன் பின்னா், முறைப்பாசனம் குறித்து மறு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீா் வளத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும் பயிா் காப்பீடு கால அவகாச நீட்டிப்பு குறித்து மேலிடத்துக்கு கடிதம் எழுதுமாறும் வேளாண் துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

கக்கரை ஆா். சுகுமாரன்: கடந்த ஆண்டு மேட்டூா் அணை அக்டோபா் மாதமே மூடப்பட்டதால், நடவு செய்யப்பட்ட பயிா்கள் அனைத்தும் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டன. பயிா் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை. இது தொடா்பாக தொடா்ச்சியாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாபநாசம் செந்தில்குமாா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை, மூட்டைக்கு ரூ. 40 என முறைகேடுகள் நிகழ்கின்றன.

இதுபோன்ற புகாா்களுக்கு உள்ளாகும் கொள்முதல் நிலைய பணியாளா்களைக் கருப்புப் பட்டியலில் சோ்த்து, தற்காலிகமாக அல்லாமல், முழுமையாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.