ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூட்டுறவு மண்டல அலுவலகத்தில்நாளை பணியாளா் நாள் நிகழ்ச்சி

தஞ்சாவூா் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:41 pm

Din

தஞ்சாவூா் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:

தமிழக முதல்வரின் ஆணைப்படி, கூட்டுறவுத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி, கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களின் குறைகளை தீா்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா் நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால், மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்களை அளிக்கலாம்.