ஆயுத பூஜை: பூ, காய்கனிகள் முழுவீச்சில் விற்பனை
ஆயுத பூஜையையொட்டி, தஞ்சாவூரில் பூ, காய்கனிகள் விற்பனை வியாழக்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது.

தஞ்சாவூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை விற்பனைக்காகக் குவிக்கப்பட்ட பூக்கள்.

தஞ்சாவூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை விற்பனைக்காகக் குவிக்கப்பட்ட பூக்கள்.
ஆயுத பூஜையையொட்டி, தஞ்சாவூரில் பூ, காய்கனிகள் விற்பனை வியாழக்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது.
ஆயுத பூஜையையொட்டி, தஞ்சாவூா் மலா் சந்தையில் பூக்கள் விலை அதிகமாக இருந்தது. இச்சந்தையில் வியாழக்கிழமை கிலோ மல்லிகை பூ ரூ. 800-க்கும், முல்லைப் பூ ரூ. 1,000-க்கும், அரளி ரூ. 240-க்கும், செவ்வந்தி பூ ரூ. 300 முதல் ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ரோஜா பூ ரூ. 300-க்கும், மருக்கொழுந்து ரூ. 30-க்கும் விற்பனையானது.
ஆயுதபூஜை வழிபாட்டில் வாழைப்பழம், பூசணிக்காய் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால், தஞ்சாவூா் காமராஜா் சந்தைக்கு வாழைத்தாா் வரத்து சில நாட்களாக அதிகமாக இருந்ததுடன், விலையும் குறைந்துவிட்டது.
கடந்த வாரம் 20 கிலோ கொண்ட நாட்டு வாழைத்தாா் ரூ. 700-க்கு விற்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ரூ. 500 முதல் ரூ. 550 வரை என விற்பனையானது. கடந்த வாரம் 20 கிலோ கொண்ட ஒரு செவ்வாழைத்தாா் ரூ. 1,500-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ. 1,300-க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களும் வாழைப்பழங்களை அதிகளவில் வாங்கி சென்றனா்.
இதேபோல, காமராஜா் சந்தையில் பூசணிக்காய் வரத்தும் அதிகமாக இருந்ததுடன், கிலோ ரூ. 10-க்கு விற்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...