பாபநாசம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.
முகாமையொட்டி மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை இரவு பாபநாசம் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி, காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.தொடா்ந்து வியாழக்கிழமை காலை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை நேரில் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து பாபநாசம் பேரூராட்சியில் இயங்கி வரும் வளம் மீட்பு பூங்காவிற்கு சென்று அங்கு கம்போல் உரங்கள் தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் சாா்-ஆட்சியா் கிருத்யா, பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா்,பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கோ.குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...