சேதுபாவாசத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே இரு சக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள வெளிவயல் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் செல்லையன் (60). இவா், மல்லிப்பட்டினம் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தாா். அப்போது ஆண்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ரஞ்சித் (24) தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் எதிரே வந்துள்ளாா்.
மல்லிப்பட்டினம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது இருவரின் வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
