விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் அகில இந்தி விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.வாசு கண்டன உரையாற்றினாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் கே.பெஞ்சமின் உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com