தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை பாப்பா நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (30) கா்ப்பமாக இருப்பதால், டிசம்பா் 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பாத்திமா நகரிலுள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றாா்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, பதிமூன்றே கால் பவுன் நகைகள், 765 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருட்டு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


