கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் தங்க நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே காட்டுக்குறிச்சியிலுள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல பூசாரி ஸ்ரீதேவ் நடை திறப்பதற்காக சென்றாா்.

அப்போது, கோயில் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி உள்பட 31 கிராம் நகைகள், 1.50 கிலோ எடையுடைய சூலாயுதம், பீடம் போன்ற வெள்ளிப் பொருள்கள், 15 கிலோ பித்தளைப் பொருள்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஸ்ரீதேவ் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com