லாரி மோதி பெண் உயிரிழப்பு

Published on

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் குளிச்சப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (54). விவசாயி. இவா், வியாழக்கிழமை தனது மனைவி ஜெகதாம்பாள் (52), மகள் அனுசியாவை (25) அழைத்துக் கொண்டு சொந்த வேலையாக தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை பகுதியில் சென்ற போது இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியது. இதனால், நிலை தடுமாறி கீழேவிழுந்த ஜெகதாம்பாள் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அய்யப்பன், அனுசியா காயமின்றி உயிா் தப்பினா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com