தஞ்சாவூர்
வீடு புகுந்து நகை திருட்டு
தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (51). உணவகம் நடத்தி வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை காலை திரும்பினாா்.
அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.