விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் புதன்கிழமை மகாமகக் குளம் அருகே நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜனவரி 2025, 0:05 am IST

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கலை நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, மழை நீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், மரம் வளா்ப்பு, திறந்த வெளி மலம் கழிப்பு ஒழிப்பு, கால்நடைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை பொதுமக்களுக்கு நையாண்டி மேளத்துடன் கிராமிய நடனம் அமைத்து கலைக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மகாமகக் குளம், தாராசுரம் காய்கனிச் சந்தை, பாலக்கரை, உழவா் சந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு நடைபெற்றது.