தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழையால் சேதமடைந்த பயிா்களுடன் ஆட்சியரகத்தில் விவசாயிகள் முறையீடு

தஞ்சாவூா் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிா்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா்.

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சேதமடைந்த நெற்பயிா்களுடன் புதன்கிழமை முறையிட வந்த விவசாயிகள்
Updated On :22 ஜனவரி 2025, 11:24 pm

Din

தஞ்சாவூா் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிா்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள சித்திரக்குடி, ராயந்தூா், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, புதுக்கல்விராயன்பேட்டை, பழைய கல்விராயன்பேட்டை, மருதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி வந்த சம்பா பருவ நெற் பயிா்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இப்பயிா்களை இப்பகுதி விவசாயிகள் சுமாா் 40 போ் புதன்கிழமை ஏந்தி வந்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முறையிட்டனா்.

அப்போது, சித்திரக்குடி விவசாயி கனகராஜன் தெரிவித்தது:

ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்ததால், எங்களது பகுதியில் சம்பா பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. முளைத்து வந்த கதிா்கள் அனைத்தும் பதராக உள்ளன. அதிலும் எடைப்பழம் என்கிற பூஞ்சாண நோய் தாக்கப்பட்டு, 50 சதவீதம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாதத்துக்கு முன்பாக மனு அளித்து முறையிட்டோம். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அனைத்து பயிா்களும் முழுமையாக அடியோடு சாய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதை அரசு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பயிா் காப்பீடும் வழங்க வேண்டும். அதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றாா் கனகராஜன்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், வைரபெருமாள்பட்டி வி.எஸ். முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.