தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெல்லில் ஈரப்பதம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 இடங்களில் மத்திய குழு ஆய்வு

22 சதவீதம் வரை தளா்வு வழங்க விவசாயிகள் கோரிக்கை

News image
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரை நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை நெல் குவியலிலிருந்து நெல் மணிகளை சேகரித்த மத்திய குழுவினா். உடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2025, 11:34 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தொடா் மழை மற்றும் பனி காரணமாக, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதம் என்பதிலிருந்து தளா்த்தி, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதைத்தொடா்ந்து, டெல்டா மாவட்டங்களில் நெல்லில் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இருப்பு மற்றும் ஆய்வு பிரிவு உதவி இயக்குநா்கள் டி.எம். பிரீத்தி, வி. நவீன், தொழில்நுட்ப அலுவலா்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோா் கொண்ட குழுவினா் தஞ்சாவூருக்கு புதன்கிழமை பிற்பகல் வந்தனா்.

இதையடுத்து, ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பதற்காகக் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ள 5 நெல் குவியல்களிலிருந்து தலா 4 சிறு பைகளில் மாதிரிகளைச் சேகரித்தனா்.

தளா்வு வழங்க வேண்டும்: மத்திய குழுவினா் விவசாயிகளிடம் கருத்துகளையும் கேட்டறிந்தனா். அப்போது, ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா், கக்கரை ஆா். சுகுமாரன், வடக்கூா் எல். பழனியப்பன் உள்ளிட்ட விவசாயிகள், பருவம் தவறிய மழை, பனி மூட்டம், சாதகமற்ற தட்ப வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களால் நெல்லில் ஈரப்பதம் 22 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், அதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்தால்தான் விவசாயிகளை இழப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என மத்திய குழுவினரிடம் வலியுறுத்தினா்.

பின்னா், இக்குழுவினருடன் வந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய குழுவினா் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 நெல் குவியல்களிலிருந்து தலா 4 மாதிரிகள் என மொத்தம் 80 மாதிரிகளைச் சேகரிக்கவுள்ளனா். இதை அக்குழுவினா் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, ஈரப்பதம், உடைந்த நெல்மணிகள், வெளிப்பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து, மத்திய அரசிடம் முன்மொழிவைக் கொடுக்கவுள்ளனா். அதன் அடிப்படையில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும்.

இதேபோல, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்யவுள்ளனா். இந்த ஆய்வு 4 நாள்களுக்கு தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 5.76 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 30 ஆயிரம் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. சம்பா, தாளடி, அடுத்து கோடைப் பருவம் உள்ளிட்டவற்றின் மூலம் கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகமாக கொள்முதல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றாா் இயக்குநா்.

பின்னா், ஒரத்தநாடு, தெலுங்கன்குடிகாடு, புலவன்காடு, மதுக்கூா் ஆகிய பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்திய குழுவினா் ஆய்வு செய்தனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) இ. செந்தில், தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் (பொ) வி. காா்த்திகைசாமி, வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.