எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேராவூரணியில் 75 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

பேராவூரணியில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 75 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்
Updated On :23 ஜனவரி 2025, 9:18 pm

Din

பேராவூரணியில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 75 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

பேராவூரணி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். பழைய பேராவூரணி தனியாா் கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடை ஒன்றில் பேராவூரணி போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது பாண்டிக்கண்ணு (59), அவரது மகன் பழனிகுமாா் (28) ஆகிய இருவரும் கடையில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல், பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னையா என்பவரது கடையில் சோதனையிட்ட போலீஸாா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 60 கிலோவைப் பறிமுதல் செய்து சின்னையா (62), அவரது மகன் சரவணக்குமாா் ( 23) ஆகியோரைக் கைது செய்தனா். இரண்டாவது முறை புகையிலைப் பொருள்கள் விற்றது கண்டறியப்பட்டதால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் கடைவீதியில் முத்துராமன் என்பவா் கடையில் 10 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தொடா்ந்து விற்பனை செய்துவந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டாா்.

மேற்குறிப்பிட்ட 4 பேரையும் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதி அழகேசன் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனா். இரண்டு கடைகளையும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் வேல்முருகன் 15 நாள்களுக்குப் பூட்டி ‘சீல்’ வைத்தாா்.