தஞ்சாவூா்: பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட ‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கீழ குடியான தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (56). தச்சு தொழிலாளி. இவா் 2024, ஜனவரி மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, கோவிந்தராஜூக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ. 4 லட்சம் அரசிடமிருந்து பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


