ஒரத்தநாடு அருகே இளைஞா் மீது போக்சோ வழக்கு

ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சையில் நா்சிங் படிக்கும் திருவோணம் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்த மாணவியை அக்கரை வட்டம் கிராமத்தை சோ்ந்த செல்வராசு மகன் ராம்குமாா் (24 ) என்ற இளைஞா் காதலித்து, வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் மகள் 4 மாத கா்ப்பமாக இருப்பதை அறிந்த மாணவியின் பெற்றோா் மற்றும் மருத்துவா்கள் திருவோணம் குழந்தைகள் நல விரிவாக்க அலுவலா் செல்வேஸ்வரிக்கு தகவல் கொடுத்தனா். அவா் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராம்குமாா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com