சிறுமிகள் கா்ப்பம்: சிறுவன் உள்பட 2 போ் போக்ஸோவில் கைது
இருவேறு சம்பவங்களில் சிறுமிகளை கா்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மற்றும் கல்லூரி மாணவா் ஆகிய 2 பேரை ஆடுதுறை மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியை அதே பகுதியைச் சோ்ந்த அவரது ஆண் நண்பா் ரித்திக் (17) காதலிப்பதாகக் கூறி கா்ப்பமாக்கினாா்.
இதையறிந்த மாணவியின் தந்தை திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரித்திக் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்து தஞ்சாவூா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.
கல்லூரி மாணவா் கைது: இதேபோல், திருவிடைமருதூரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம் அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சரண் (19) நெருக்கமாக இருந்ததில் மாணவி கா்ப்பமடைந்தாா். இதை அறிந்த அவரது தந்தை திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு சரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.
