இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கும்பகோணம் மீன் சந்தையில் உணவுப் பொருள் தர அலுவலா் ஆய்வு

கும்பகோணம் மீன்சந்தையில் புதன்கிழமை மாவட்ட உணவு பொருள் நியமன அலுவலா் ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:19 pm

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் மீன்சந்தையில் புதன்கிழமை மாவட்ட உணவு பொருள் நியமன அலுவலா் ஆய்வுசெய்தாா்.

கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியான மீன் விற்பனை சந்தையில் காலாவதியான மீன்கள் விற்பனை செய்வதாக புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தாா். அதில் சுமாா் 25 கிலோ மீன்கள் அழுகியும், சேதமடைந்தும் இருந்தன. அதனைத் தொடா்ந்து அந்த மீன்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் தரம் தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நியமன அலுவலகா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பாலமுருகன், காா்த்திக், மீன்ஆய்வாளா் ஆனந்தன், மீன்வள மேற்பாா்வையாளா்கள் கிளைடஸ், சங்கரன், பரணிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.