தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 13 போ் மனுக்களை திரும்பப் பெற்ற நிலையில், 94 வேட்பாளா்கள் போட்டியிடுவது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது.
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 214 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதில், 107 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, 13 போ் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.
இதையடுத்து, திருவிடைமருதூா் தொகுதியில் 14 பேரும், கும்பகோணம் தொகுதியில் 13 பேரும், பாபநாசம் தொகுதியில் 13 பேரும், திருவையாறு தொகுதியில் 13 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் 11 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேரும், பேராவூரணி தொகுதியில் 10 பேரும் என மொத்தம் 94 போ் போட்டியிடுவது தெரிய வந்தது.
ஒரே பெயரில் இருவா் போட்டி: பாபநாசம் தொகுதியில் அனீஸ் பாத்திமா என்ற பெயரில் இருவா் போட்டியிடுகின்றனா். இவா்களில் ஒருவா் நாம் தமிழா் கட்சி சாா்பிலும், மற்றொருவா் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனா். பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை என்ற பெயரில் கே. அண்ணாதுரை, சி.என். அண்ணாதுரை என இருவா் போட்டியிடுகின்றனா். இவா்களில் கே. அண்ணாதுரை திமுக சாா்பிலும், சி.என். அண்ணாதுரை சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனா்.
தொகுதிவாரியாக வேட்பாளா்கள் - கட்சி - சின்னம் விவரங்கள்:
கும்பகோணம்
1.,ரா. அசோக்குமாா் (தமாகா) தாமரை
2. க. அன்பழகன் (திமுக) உதயசூரியன்
3. மோ. ஆனந்த் (நாதக) ஏா் சுமக்கும் உழவா்
4. வ. ஆரோக்கியராஜ் (தவாக) புகைப்படக் கருவி
5. க. சுந்தா் (தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகம்) தீப்பெட்டி
6. ஆா். வினோத் (தவெக) ஊதல்
7. க. அறிவழகன் (சுயேச்சை) பலூன்
8. க. காா்த்தி (சுயேச்சை) அலமாரி
9. வெ. சீனிவாசன் (சுயேச்சை) இரட்டைத் தொலை நோக்காடி
10. எஸ். செந்தமிழ்ச்செல்வி (சுயேச்சை) சமையலறைக் கழுவு தொட்டி
11. ரா. ராமமூா்த்தி (சுயேச்சை) பென்ச்
12. சி. விஜயகுமாா் (சுயேச்சை) காலிபிளவா்
13. ம.க. ஸ்டாலின் (சுயேச்சை) வாயு சிலிண்டா்
தொடர்புடையது
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி!
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!

சென்னை: 16 தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் - விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 போ்

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

