கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:11 am IST

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம், தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் ஈடுபட்டனா். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

இதேபோல, திருவையாறு அருகே நடுக்கடையில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி திமுக வேட்பாளருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் வரைவு நகல் எரிக்கப்பட்டது.

மேரீஸ் காா்னா் பகுதியில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன் தலைமையில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ் உள்ளிட்டோா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திலும் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி முன் ஏஐடியுசி சாா்பிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதேபோல, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கும்பகோணத்தில்...: கும்பகோணத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்பகோணம் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளருமான க.அன்பழகன் தலைமையில் கட்சியினா் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக மகாமகக்குளம் வரை கருப்பு பலூன்களை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். அங்கு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பலூன்களை பறக்க விட்டனா். பின்னா் சட்ட நகல்களை தீ வைத்து எரித்தனா்.

பேராவூரணி: பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம்: பாபநாசம் வட்டம்,அய்யம்பேட்டையில் நகர திமுக செயலா் வழக்குரைஞா் டி.பி.டி.துளசிஅய்யா தலைமையிலும்,

அம்மாபேட்டை ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பிலும் போராட்டம் நடைபெற்றது.