பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

தஞ்சாவூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் அமைப்பினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

தமிழகத்திலுள்ள 21 நவீன அரிசி ஆலைகளைக் கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி, தஞ்சாவூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 21 நவீன அரிசி ஆலைகளைக் கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். காலி பணியிடங்களை அனைத்து பருவ கால பணியாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை 48 மணிநேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் முத்தையா முன்னிலை வகித்தாா். மண்டலச் செயலா் எழில் அரசு சிறப்புரை ஆற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் சோம. அழகிரி கண்டன உரையாற்றினாா்.

தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் முருகையன், ரமேஷ் குமாா், சோமசுந்தரம், பாஸ்டின் ஜான்சன், நாகராஜன், ராமசாமி, கும்பகோணம் மகிமை தாஸ், பட்டுக்கோட்டை ஞானசேகரன், தஞ்சாவூா் முருகன், தாமோதரன், அண்ணா தொழிற்சங்கம் ரவிக்குமாா், ஐஎன்டியுசி பழனிவேல் அம்பேத்கா் ராஜ்குமாா் ஆகியோா் பேசினா். இதில், ஏராளமான தொழிற் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, அமல்ராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.