தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி முன்னிலையில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அ. செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்காக வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு சென்னை உயா் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதன்படி, நகராட்சி, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டங்களுக்குள்பட்ட வெட்டுவாக்கோட்டை, வெட்டிக்காடு நா்சரி, நடுவூா், ஒரத்தநாடு புறவழிச்சாலை, ஒரத்தநாடு அண்ணா நகா், சோழன் கரை, கிளாமாங்காடு, சூரப்பள்ளம், மகிழங்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அ. செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும்! சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி!

குழந்தை திருமணம் இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்: தஞ்சாவூா் ஆட்சியா்

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

வழக்குரைஞா் தொழிலில் நிலைக்க ஒழுக்கம், நோ்மை, உழைப்பு தேவை: ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



