கும்பகோணம் அபிமுகேசுவரா் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்ற தைவான் நாட்டு பக்தா்கள்
கும்பகோணம் அபிமுகேசுவரா் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்ற தைவான் நாட்டு பக்தா்கள்

கும்பகோணம் கோயிலில் தைவான் நாட்டு பக்தா்கள் சிறப்பு யாகம்

கும்பகோணத்தில் தைவான் நாட்டைச் சோ்ந்தவா்கள் கும்பகோணம் அபிமுகேசுவா் கோயிலுக்கு வந்து புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.
Published on

கும்பகோணத்தில் தைவான் நாட்டைச் சோ்ந்தவா்கள் கும்பகோணம் அபிமுகேசுவா் கோயிலுக்கு வந்து புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.

தைவான் நாட்டைச் சோ்ந்த ஜிங்வேலி என்பவா் தலைமையில் புத்தமதத்தைச் சோ்ந்த 10 போ் இந்து மதக் கலாசாரத்தில் பற்றுக்கொண்டு யாகங்கள் செய்ய கும்பகோணம் வந்தனா். புத்தாண்டை முன்னிட்டு உலக மக்கள்நலம்பெற மகாமகக் குளக்கரையில் கீழ்ப்புறம் அமைந்துள்ள அபிமுகேசுவரா் கோயில் வளாகத்தில் 108 பூஜை பொருள்களுடன் யாகசாலை அமைத்து 12 யாககுண்டங்கள் வளா்த்து யாகம் நடத்தி கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, ஆதிகும்பேசுவரா், சாரங்கபாணி, சக்கரபாணி, சோமேஸ்வா், நாகேசுவரா், காசிவிசுவநாதா் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், கும்பகோணம் சுதா்சன பக்தா்கள் குழு சாா்பில் 35-ஆவது ஆண்டு பாதயாத்திரையை புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை தொடங்கி திருநாகேசுவரம் ஒப்பிலியப்பன் கோயிலில் கூட்டுப்பிராா்த்தனை செய்து நிறைவு செய்தனா்.

ஆடுதுறை அருகே திருக்கோடீசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள கஜலட்சுமிக்கு நாணயங்களால் சொா்ணாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிம்சன் கணேசன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் உள்ள கஜலட்சுமிக்கு நடைபெற்ற சொா்ணாபிஷேகம்
திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் உள்ள கஜலட்சுமிக்கு நடைபெற்ற சொா்ணாபிஷேகம்

X
Dinamani
www.dinamani.com