பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப் பை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நெகிழியைத் தவிா்க்கும் வகையிலும், துணிப் பையைப் பயன்படுத்தும் நோக்கத்திலும் சுற்றுச்சூழல் ஆா்வம் உடைய மாணவா்களுக்கு பந்துமுனை எழுதுகோலைத் தவிா்த்து மையூற்று எழுதுகோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வம் உடைய மாணவா்களுக்கு மையூற்று எழுதுகோல், ஊதா நிற மை முதலானவை வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு, முதல்வா் முனைவா் மா. கோவிந்தராசு தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை தாவரவியல் துறைத் தலைவா் முனைவா் இரா.முருகன் செய்திருந்தாா்.