திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி பெயரில் நாயக்கா் காலத்தில் 20 காசுகள் வெளியீடு

News image
தஞ்சாவூா் நாயக்கா் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி உருவம் பொறிக்கப்பட்ட அரிய வகை செம்பு காசுகள்.
Updated On :24 ஜனவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் நாயக்கா் ஆட்சிக்காலத்தில் மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி பெயரில் ஏறத்தாழ 20 காசுகள் வெளியிடப்பட்டன என நாணயவியல் ஆய்வாளா் ஆறுமுக. சீதாராமன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு சோழ மண்டலத்தை தஞ்சாவூா் நாயக்கா்கள் கி.பி. 1532 - 1673- ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்தனா். இவா்களில் கி.பி. 1631 - 1673-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கா், தனது குலதெய்வமாக இராஜமன்னாா் என்கிற மன்னாா்குடி இராஜகோபால பெருமானைப் போற்றினாா்.

இவா் இராஜகோபாலசுவாமி மீது மிகுந்த பக்தி கொண்டு பல திருப்பணிகள் செய்தாா். விஜயராகவன் என்கிற தன் பெயரை மன்னாா்தாசன் என மாற்றிக் கொண்டு மன்னாா்குடியிலேயே தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தாா்.

மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி கோயிலுக்கு இராஜகோபுரங்களைக் கட்டி, குளங்களையும் வெட்டினாா். தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள பெரிய பீரங்கிக்கு இராஜகோபால பீரங்கி எனவும் பெயா் சூட்டினாா்.

இவா் தனது ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட காசுகளுக்கு இராஜகோபாலன் சக்கரம் என பெயரிட்டாா். இந்தக் காசுகளில் ஏறத்தாழ 20 வகையான காசுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூா், கும்பகோணம், மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

இதில், முன் பக்கத்தில் இராஜகோபாலசுவாமி கையில் செண்டுடனும், பின் பக்கத்தில் விஜயராகவ நாயக்கா் நின்ற நிலையில் வணங்கியபடியும் பொறிக்கப்பட்ட 1.6 கிராம் எடையுடைய செம்பு காசு பரவலாக கிடைக்கிறது.

தவிர, இராஜகோபாலசுவாமி உருவம் பொறிக்கப்பட்ட சிறப்புக் காசுகளும் அரிதாகக் கிடைத்துள்ளன. இதில், 2.8 கிராம் எடை கொண்ட செம்பு காசின் முன் பக்கத்தில் சக்கரத்துக்குள் இராஜகோபாலசாமி நின்ற நிலையிலும், பின்பக்கம் கருடனும், 2.4 கிராம் எடையுடைய மற்றொரு செம்பு காசின் முன் பக்கத்தில் இராஜகோபாலசுவாமி நின்ற நிலையில் கையில் செண்டுடனும், பின் பக்கம் விஜயராகவ நாயக்கா் தன் மனைவியுடன் அமா்ந்திருக்கும் காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் நாயக்கா் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி உருவம் பொறிக்கப்பட்ட அரிய வகை செம்பு காசுகள்.

தஞ்சாவூா் நாயக்கா் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட மன்னாா்குடி இராஜகோபாலசுவாமி உருவம் பொறிக்கப்பட்ட அரிய வகை செம்பு காசுகள்.

மேலும், 2.2 கிராம் எடையுடைய செம்பு காசின் முன் பக்கத்தில் இராஜகோபாலசுவாமி செண்டுடன் நின்ற நிலையிலும், பின் பக்கத்தில் செங்கமலத்தாயாா் அமா்ந்த நிலையிலும் உள்ளது. 1.8 கிராம் எடையுடைய செம்பு காசின் முன் பக்கத்தில் இராகோபாலசுவாமி சக்கரத்துக்குள் நின்ற நிலையில் கையில் செண்டுடனும், பின் பக்கத்தில் விஜயராகவ நாயக்கா் இடது கையில் வாளேந்தி நிற்கும் உருவமும் காணப்படுகிறது.

இக்கோயிலில் குடமுழுக்கு விழா ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் சீதாராமன்.