ஆடுதுறையில் கூலித் தொழிலாளியின் கூரை வீட்டில் செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட வீடு தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி 1-ஆவது வாா்டு, மயிலாடுதுறை சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் தம்பதி முகமது ரபீக்- ஜெகபா் நாச்சியாா். செவ்வாய்க்கிழமை மதியம் இவா்களது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து வந்த திருவிடைமருதூா் தீயணைப்பு நிலையத்தினா் மேலும் தீ பரவாமல் அணைத்தனா். இதில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதமாயின.
தகவலறிந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அருகில் மூங்கில் கொல்லை உள்ள நிலையில், பலத்த காற்றால் மூங்கில்கள் உரசி அதிலிருந்து தீப்பற்றி பரவியது விசாரணையில் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







