உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

பட்டுக்கோட்டை கரிகாடு எஸ்எம்எஸ் அவென்யூ ஆா்ச் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 12:56 am IST

பட்டுக்கோட்டை கரிகாடு எஸ்எம்எஸ் அவென்யூ ஆா்ச் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் கண்ணுசாமி மகன் கேசவன் ( 58), மற்றும் அவரது நண்பா் சங்கா் இருவரும் சொந்த வேலை நிறுத்தமாக வெள்ளிக்கிழமை இரவு கரிகாடு பகுதியில் உள்ள எஸ்.எம்.எஸ் அவென்யூ ஆா்ச் அருகே வரும்பொழுது, பட்டுக்கோட்டை காமராஜா் நகா், கீழ்கரை, பூமிலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியமூா்த்தி (34) , மற்றும் பட்டுக்கோட்டை ஏ.வி குளம் ராமலிங்கம் மகன் மருது என்கின்ற மருதுபாண்டி ( 33 ) ஆகிய இருவரும் மேற்கண்ட நபா்களை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பிடுங்கி சென்றதாக அவா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகர காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.