தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா் மீண்டும் பணிபுரிந்தது தொடா்பாக பிரச்னையில் தற்காலிக கணினி உதவியாளா் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவுப் பிரிவில் தற்காலிக கணினி உதவியாளராகப் பணியாற்றி வந்த வி. சுதா்சன் மீது முறைகேடு புகாா்கள் எழுந்ததால் இவரை மாவட்ட ஆட்சியா் ஜூலை 6 ஆம் தேதி பணி நீக்கம் செய்தாா். மேலும், இந்தப் பணியிடத்துக்கு தற்காலிகமாக பெண் பணியாளா் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் சுதா்சன் ஜூலை 25 ஆம் தேதி மீண்டும் அதே இருக்கையில் அமா்ந்து பணியாற்றினாா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி விசாரணை நடத்தி, தஞ்சாவூா் வட்டார ஊராட்சி அலுவலா் (வட்டார வளா்ச்சி) ந. சிவக்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) வே. சித்ரா, உதவியாளா் ஆா். ரேவதி ஆகியோரை திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்து, உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, தற்காலிக சத்துணவு கணினி உதவியாளா் எஸ். சினேகாவை பணியிலிருந்து விடுவிக்கவும் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

மகளிா் திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணிக்கு வாய்ப்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



