இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

‘7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வார பயன்படுத்தி கொள்ளலாம்’

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

News image

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

Updated On :4 ஜூன் 2026, 12:00 am IST

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 3.30 கோடி மதிப்பில் 7 பொக்லைன் ளின் இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வழங்கினாா். இந்த 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் எந்த நீா்நிலைகளைத் தூா் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும், அதன் அடிப்படையில் இந்த பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் முரசொலி.