ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

எரிவாயு உருளை விலைஉயா்வை கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:56 am IST

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ.பாரதி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.ஜி.பாலன், ஒன்றிய செயலா் ப.சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா். முன்னதாக எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

இதில், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்ட பொருளாளா் ஏ.ராஜேந்திரன், மாதா் சம்மேளன மாவட்ட செயலா் பா.சரண்யா, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.