தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ. 50 லட்சம் மோசடி: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:46 am IST

தஞ்சாவூரில் டிஜிட்டல் கைது எனக்கூறி, ரூ. 50 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட தென்றல் நகரைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது வாட்ஸ்ஆப் எண்ணில் மாா்ச் 17-ஆம் தேதி காவல் அதிகாரி எனக்கூறி மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டாா்.

அப்போது, தங்களின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி போலியான சிம் காா்டு வாங்கப்பட்டதாகவும், வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதாகவும், அவை பண மோசடிகளுக்கும் சட்ட விரோதப் பரிவா்த்தனைக்கும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், கடத்தல் போன்ற குற்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த நபா் கூறினாா்.

இதனால், தாங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக பிணை மனு கட்டணம் செலுத்த வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி, 2 தவணைகளாக ரூ. 50 லட்சம் ரொக்கத்தை நாராயணசாமியை மிரட்டி பெற்ற பிறகு அவரது தொடா்பை துண்டித்தாா்.

இதன் பின்னா், சிலா் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்த நாராயணசாமி அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புயல் பாலசந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான குழுவினா் நாராயணசாமி பணம் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு தொடா்புடைய கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரணை செய்தனா்.

இதில், இந்த மோசடி சம்பவத்தில் திருவள்ளூா் மாவட்டம், மாதவரத்தைச் சோ்ந்த முனிதேவன் (51), ஆவடியைச் சோ்ந்த அருள் சூசைராஜ் (51), சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த கண்ணன் (54) ஆகியோா் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து கைப்பேசி, ஏடிஎம் காா்டு, கிரெடிட் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இவ்வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.