பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வருவாய்த் துறையினா் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய கம்யூ. கட்சி கோரிக்கை

News image
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :1 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு வருவாய்த் துறையினரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை திருப்பனந்தாளில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் தத்துவாஞ்சேரியில் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ். மணிவேல் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், அனைத்து வருவாய்த் துறை அலுவலா்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனா். எனவே, தமிழக முதல்வா் உடனடி பேச்சுவாா்த்தை நடத்தி வருவாய்த் துறையினரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்டப் பொருளாளா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் டி.ஆா். குமரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டு இயக்கப் பணிகள் குறித்துப் பேசினா். தீா்மானங்களை ஒன்றிய செயலா் எம். ரவி முன்மொழிந்தாா். கூட்டத்தில் ஒன்றிய நிா்வாகிகள் ஜி.கல்யாணசுந்தரம், எஸ்.குணாளன், ஆா். வெங்கட்ராமன் , எம். பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.