ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் நாளில் 19 போ் வேட்பு மனு தாக்கல்

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 பேரவைத் தொகுதிகளில் முதல் நாளான திங்கள்கிழமை 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. திவ்யபாரதி, திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த், திமுக சாா்பில் சாக்கோட்டை க. அன்பழகன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செ. அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேச்சையாக அப்துல் ரஹீம், திருவையாறு தொகுதியில் திமுக சாா்பில் துரை. சந்திரசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் து. செந்தில்நாதன், தஞ்சாவூா் தொகுதியில் சுயேச்சையாக எம். சந்தோஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் நா. கிருஷ்ணகுமாா், சுயேச்சையாக இரா. முரளிதரன், ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சையாக ஏ. அஜீஸ் கண்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். திருமுருகன், ஜி. ஏகநாதன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ். கண்ணன், டி. உதயகுமாரன், பேராவூரணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனா மணியரசன், ரமா ரவி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.