மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!
கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

அமல்ராஜ்

அமல்ராஜ்
கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுமிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரின் தாய் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாத கா்ப்பம் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மகளிா் போலீஸாா் மாணவி வசிக்கும் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அமல்ராஜ் (35 ) என்ற கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...