திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிா்கள் தஞ்சையில் திமுக குழுவினா் ஆய்வு

தஞ்சாவூா் அருகே தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிா்கள் குறித்து திமுக சாா்பில் அமைக்கப்பட்ட காவிரி விவசாயிகள் கருத்துக் கேட்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தஞ்சாவூா் அருகே ஆலக்குடியில் காய்ந்த பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட திமுக குழுவினா்.

Updated On :

தஞ்சாவூா் அருகே தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிா்கள் குறித்து திமுக சாா்பில் அமைக்கப்பட்ட காவிரி விவசாயிகள் கருத்துக் கேட்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இக்குழுவில் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, மக்களவை உறுப்பினா்கள் அருண் நேரு, ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் (முன்னாள் வேளாண் துறை அமைச்சா்), துரை. சந்திரசேகரன், செந்தில்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தஞ்சாவூா் அருகே ஆலக்குடி கிராமத்தில் தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிா்களைப் பாா்வையிட்ட இக்குழுவினா் விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனா்.

விரைவில் அறிக்கை தாக்கல்: இதையடுத்து, செய்தியாளா்களிடம் திருச்சி சிவா தெரிவித்தது:

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியாளா்கள் தவறான நேரத்தில் மேட்டூா் அணையைத் திறந்தனா். இது தொடா்பாக இங்குள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனா்.

இதனால், விதைத்த நெற்பயிா்கள் வளா்ந்து காய்ந்து வருகின்றன. இனிமேல் இந்தப் பயிா்கள் எதற்கும் உதவாது. மாட்டுக்குக் கூட தீவனம் இல்லாத வேதனையான நிலைக்கு ஆளாகியுள்ளோம். கா்நாடகத்திடம் முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தி, இங்குள்ள விவசாயிகளின் குறைகளைத் தீா்ப்பதற்கு தமிழக அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, விவசாயிகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, இங்குள்ள நிலைமைகளை ஆய்ந்து அறிந்து, விரைவில் அறிக்கை தரவுள்ளோம். அதன் பின்னா், ஸ்டாலின் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாா் என்றாா் சிவா.

போராட்ட வாழ்க்கை: எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என தவெகவினா் கூறினா். அதை நம்பி விவசாயிகளும் வாக்களித்தனா். தற்போது, வாக்களித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். விவசாயிகளின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.