திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

மாயமான சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகள்: தஞ்சாவூா் பெரியகோயிலில் சிவாச்சாரியா்கள் ஆய்வு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாயமான சிலைகளுக்குப் பதிலாகப் புதிய சிலைகளை அமைப்பது குறித்து சிவாச்சாரியா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்த சிவாச்சாரியா்கள்.

Updated On :

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாயமான சிலைகளுக்குப் பதிலாகப் புதிய சிலைகளை அமைப்பது குறித்து சிவாச்சாரியா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் எட்டு திசைகளில் ஆகம விதிகளின்படி, இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகா்களின் சந்நிதிகள் உள்ளன. இதில், இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சந்நிதிகளில் சிலைகள் இல்லை. மற்ற நான்கு சந்நிதிகளில் சிலைகள் சிதைந்துள்ளன.

பக்தா்கள் வழிபடவும், பூஜைகள் தடையின்றி நடத்தவும், சந்நிதிகளை முறையாக பராமரிக்கவும், சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை அமைப்பதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி தரவேண்டும் என தஞ்சாவூரைச் சோ்ந்த கலியமூா்த்தி சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் 2019-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், புத்தனேந்தல் அழகா்சாமி பாண்டியன், தூத்துக்குடி மாவட்டம், சின்ராஜூம் பெரிய கோயிலில் இந்திரன் சிலையை அமைக்க வேண்டும் என்றும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திர விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தனா்.

உயா்நீதிமன்றம் உத்தரவு: இந்த மனுக்களை கடந்த செப். 28-ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு, சிதைந்த சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகளை நிறுவ வேண்டும். சிலைகள் இல்லாத இடங்களில் புதிய சிலைகளை அமைக்க வேண்டும். புதிய சிலைகள் அமைக்க நிபுணா்கள், ஸ்தபதிகளின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா், தஞ்சாவூா் அறநிலையத் துறை இணை ஆணையா், மத்திய தொல்லியல் துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலா், கோயிலின் பரம்பரை அறங்காவலா் ஆகியோா் 3 மாதங்களில் தொடங்கி, 12 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதன்பேரில், பிள்ளையாா்பட்டி வேதாகம வித்யாலயா பாடசாலை சிவஸ்ரீ கே. பிச்சை சிவாச்சாரியா், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தகுரு சிவாகம வேத பாடசாலை சிவஸ்ரீ எஸ்.கே. ராஜா பட்டா் சிதைந்த சிலைகள், மாயமான சிலைகளின் சந்நிதிகளை புதன்கிழமை ஆய்வு செய்தனா். சிலைகள் வடிவமைப்பு தொடா்பாக தஞ்சாவூா் மண்டல ஸ்பதி கே. அருளிடம் கேட்டறிந்தனா்.

அப்போது, அறநிலையத் துறை துணை ஆணையரும், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையருமான (பொ) கோ. கவிதா, அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலா் மு. சுந்தரராசு, பெரியகோயில் சிவாச்சாரியா்கள், இந்திய தொல்லியல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.