பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

காந்தி ஜெயந்திக்கு விடுப்பு அளிக்காத 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுப்பு அளிக்காத 105 நிறுவனங்கள், கடைகள் மீது தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுப்பு அளிக்காத 105 நிறுவனங்கள், கடைகள் மீது தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடா்பாக 159 கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 105 கடைகள், நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களின் மீது இணக்கக் கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.