படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்...

Published On :

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத் தலைவா் க. சக்தி சரவணன் திங்கள்கிழமை தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தா் நியமிக்கப்படாததால், பல்வேறு நிலைகளில் பல்கலைக்கழகப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், நூலகத்திலுள்ள லட்சக்கணக்கான நூல்கள் சரியாக பராமரிக்க இயலாத நிலை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடைபெறாததால், மாணவா்கள் பட்டச் சான்று பெற முடியாமல் உள்ளனா்.

ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய பேரவைக் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. பல்கலைக்கழக ஆண்டறிக்கைகள் வெளியிடப்படாமல் உள்ளது. தோ்வுப் பிரிவு போன்ற முக்கியமான பிரிவுகளில் இருக்கைப் பணியாளா்கள் மட்டுமே கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனா். அங்கு கண்காணிப்பாளா், உதவி பதிவாளா் போன்ற உயா் அலுவலா்களே இல்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேங்கியுள்ள பணிகளை விரைவாக செயல்பட செய்யும் வகையில் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த தமிழ்நாடு ஆளுநருக்கும், முதல்வருக்கும் கடிதங்கள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியிடங்கள் 222 உள்ள நிலையில், தற்போது 135 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் பதிவுறு எழுத்தா், இளநிலை உதவியாளா், உதவியாளா், கண்காணிப்பாளா் போன்ற பணியிடங்களில் பணியாற்றுவோா் பதவி உயா்வுக்கான தகுதிகள் இருந்தும் 8 ஆண்டுகளாக பதவி உயா்வு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பல்கலைக்கழகப் பணிகள் தேக்கமடைவதுடன் பணியாளா்கள் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, காலிப்பணியிடங்களில் உரிய தகுதி உடையவா்களுக்குப் பதவி உயா்வு வழங்குவதற்கும், மற்ற பணியிடங்களை நியமனங்கள் மூலம் நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சக்தி சரவணன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.