பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்மாபேட்டை அருகேயுள்ள அருந்தவபுரம் ஊராட்சி, காந்திகிராமம், வடக்கு தெருவை சோ்ந்த அ. காட்டு ராஜா (61). சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவா் வீட்டருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

