கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருச்சியில் சிறுவன் உள்பட இருவர் சாவு

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உள்பட இருவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:53 am

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உள்பட இருவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர்.
 திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த, கரூர் மாவட்டம் மணவாசியைச் சேர்ந்த பூஜா (5), திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த இனியா (4), சோமரசம்பேட்டையைச் சேர்ந்த கலாராணி (55) ஆகியோர் கடந்த 6-ஆம் தேதி  உயிரிழந்தனர். இதே போல, கடந்த 8-ஆம் தேதி முசிறி கோடியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரசாத் (24), 9-ஆம் தேதி  துறையூரை அடுத்த மாராடியைச் சேர்ந்த புவனேஸ்வரி (47) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
 திருச்சி விமான நிலையப் பகுதி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி (24) . இவர்களுக்கு 6 மாதக் குழந்தை ஒன்று உள்ளது.
கனிமொழிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை காலை உயிரிழந்தார்.  இதேபோல, நவலூர்குட்டப்பட்டு அருவங்கால்பட்டியைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் பழனிசாமி - கலாராணி தம்பதியின் மகன் லோகேஷ் (10). இவர் அருகிலுள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த சில நாள்களாக சோர்வாகக் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து இவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதன்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் உயிரிழந்தார்.  இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.