தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

திருச்சி தாயுமானவர் சைவ சித்தாந்தப் பேரவை நடத்தும் ஆறாம் ஆண்டு இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:28 am

DIN

திருச்சி தாயுமானவர் சைவ சித்தாந்தப் பேரவை நடத்தும் ஆறாம் ஆண்டு இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்பேரவையின் செயலர்கள் பெ. பாலசுப்பிரமணியன்,  அப்பரடிப்பொடி ச. திருநாவுக்கரசு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாயுமானவர் சைவ சித்தாந்தப் பேரவை நடத்தும்  சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு திருவானைக்கா பெரியார் நகரிலுள்ள இயற்கை நலவாழ்வு மையத்தில் மே 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சைவ சித்தாந்த சாத்திரங்கள் உணர்த்தும் அடிப்படை உண்மைகளும், திருமுறைகளில் இடம்பெற்றுள்ள  தமிழ்ப் பண்புகளும், சித்தாந்தக் கருத்துகளும் இந்த வகுப்புகளில் போதிக்கப்படும்.
திருக்கோயில் வழிபாட்டின் நோக்கம், திருத்தலங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள், திருக்குறள், திருமந்திரம்போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ள சைவ சித்தாந்த கருத்துகள், இயற்கை வாழ்வியல் அடிப்படையில் வாழும் முறை ஆகியவை பற்றிஅறிந்து கொள்ள இவ்வகுப்புகள் பெரிதும் பயன் அளிக்கும்.
ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம்.  வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு 10 நாள்களும் தங்குமிடம்,உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.  பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.
வகுப்பில் சேர விரும்புவோர் தன் விவரக் குறிப்புகளுடன் ( பெயர், முழு முகவரி, வயது, படிப்பு, தொழில், சைவ சமயத்தின் ஈடுபாடு,  அலைபேசி எண்)  மே 15 ஆம் தேதிக்குள்  இயற்கை நலவாழ்வு மையம்,  50/186, பெரியர் நகர், திருவானைக்கா, திருச்சி-5 என்ற முகவரிக்கு அனுப்பி, பெயரைப் பதிவு செய்து அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும். 
முதலில் வரும் 50 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். காலை 9 மணி முதல் பிற்பகல் 1, பிற்பகல் 2 .30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 93451-11642,  94868-16509 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.