ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மேலாண்மைக் கல்வி பயில சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் இந்திய மேலாண்மைக் கழகத்தின் இயக்குநர் பிம்மராய மேத்ரி.
திருச்சியிலுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் நிகழண்டுக்கான முதுகலை மேலாண்மைப் படிப்பு வகுப்புகள் தொடக்கம், விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த
இந்திய மேலாண்மைக் கழகத்தின் இயக்குநர் முனைவர் பிம்மராய மேத்ரி பேசியது:
கடந்தாண்டு முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் 25 மாணவிகள் மட்டுமே சேர்ந்த நிலையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போன்று, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மேலாண்மைக் கல்வி பயில நிகழாண்டில் மொத்தமுள்ள 180 இடங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவிகள் 90 பேர் சேர்ந்துள்ளனர்.
மாணவர்கள் கல்விக் கற்பதற்கான அனைத்து வசதிகளும் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
கலாசாரம் மிகுந்த நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் தலைச் சிறந்தவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.
மைசூர் லகரி நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சீவ் குமார் குப்தா வகுப்புகளைத் தொடக்கி வைத்து பேசினார். ஹைதராபாத் என்.எம்.டி.சி. நிறுவனத்தின் பொது மேலாளர் ஜிப்தேஷ் ஜித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தொடர்ந்து, கல்வி அடிப்படையில் சிறந்து விளங்கிய 2017-19 ஆம் ஆண்டு முதுநிலை மேலாண்மைப் படிப்பு பிரிவைச் சேர்ந்த தீபிஷ் அகர்வால், அருண், ஜகதாப் சச்சீன் சுரேஷ் உள்ளிட்டோருக்கு மெரிட் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, முதுகலை மேலாண்மைப் படிப்புப் பிரிவுத் தலைவர் காட்வின் டென்னிசன் வரவேற்றார். ஆய்வுப் படிப்பு பிரிவுத் தலைவர் சங்கல்ப் பிரதாப் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


