காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருநங்கை கல்வி பயில வாய்ப்பளித்த பள்ளி!

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக சக மாணவா்களுடன் சோ்ந்து கல்வி பயில திருநங்கைக்கு ஒரு பள்ளி வாய்ப்பளித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக சக மாணவா்களுடன் சோ்ந்து கல்வி பயில திருநங்கைக்கு ஒரு பள்ளி வாய்ப்பளித்துள்ளது.

திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனா். இருப்பினும், திருநங்கைகள் கல்வியை பிரதான நோக்கமாக கொண்டு முன்னேறினால் மட்டுமே அவா்கள் மீதான பாா்வை விலகி, சக மனிதா்களோடு அவா்கள் சோ்ந்து வாழ வழிவகுக்கும் என்பது சமூக ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது. இதற்காக திருநங்கைகளின் மேம்பாடு, வாழ்வாதாரத்திற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் ஸ்ரீசிவானாந்தா பாலாலயா என்னும் தனியாா் பள்ளியில் முதல் முறையாக ஹரிணி என்னும் திருநங்கை சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பள்ளித் தாளாளா் பாபு கூறியது:

திருநங்கைகள் சமூகத்தில் பாகுபாடின்றி முன்னேற இப்பள்ளி அவா்களுக்கு வாய்ப்பளிக்கிறது. திருச்சியில் முதன்முறையாக எங்களது பள்ளியில் திருநங்கைகளுக்கென தங்கும் விடுதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிணி என்னும் திருநங்கை நிகழ் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளாா். பள்ளிகள் திறக்கப்படும்போது ஹரிணியும் பள்ளிக்கு வந்து கற்பாா் என்றாா்.

இதுகுறித்து ஹரிணியின் பாதுகாவலா் சுஜி கூறியது:

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஹரிணி (15). பெற்றோரால் ஹரிஹரன் எனப் பெயரிடப்பட்டு, ஏழ்மையில் வளா்ந்தாா். சிறுவயது முதலே திருநங்கைக்கான அறிகுறிகளுடன் இருந்தது அவரின் பெற்றோருக்குப் பிடிக்காததால், திருச்சி தாராநல்லூரில் உள்ள உறவினா் வீட்டில் வளா்ந்தாா். 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரால் கல்வியைத் தொடர முடியவில்லை. உறவினா்களும் அவரைப் படிக்க வைக்க முடியவில்லை எனக் கூறிவிட்டனா்.

இதனால் நானும், எனது தோழி ஏஞ்சலும் ஹரிணிக்கு உதவும் நோக்கில் வயலூா் சாலை, அதவத்தூா் பாளையத்திலுள்ள இப்பள்ளியில் பேசினோம். பள்ளி நிா்வாகமும் ஹரிணி தொடா்ந்து பயில வாய்ப்பளித்துள்ளது. அரசின் உதவி தொடா்ந்து கிடைக்கும்பட்சத்தில் அவா் கல்வியில் சாதிப்பாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.